நாமும் இரத்ததானம் செய்யலாமே!!!
தாராளதன்மை, பல வகைகளில் வெளிப்படலாம். நன்கொடை, அன்னதானம் ஆகியவை கொடையின் வடிவங்களே.
கொடையாக வழங்கப்படும் பொருளை அல்லது செல்வத்தை விட தாராளமான மனநிலையே உண்மையான
வள்ளல் தன்மையை வெளிக்காaட்டும். தானத்தில் சிறந்தது இரத்ததானம். மனித நேயமுடைய
அன்புள்ளங்களால் தான் இத்தகைய கொடைகளை அளிக்க முடியும். சொல் நயங்களால்
பேசப்படுகின்ற தலைப்பு அல்ல இது. உணர்வுபூர்வமாக செயல்படுத்த வேண்டியது. இன்று
அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாக பலரால் செயல்படுத்தப்படுவது தான் இரத்ததானம்.
உடலிலுள்ள ஒவ்வொரு நாடி
நரம்புகளுக்கு ஊடாக ஓடுவது தான் இரத்தம். சோதனைக்குழாய் மூலமாக குழந்தை
கருத்தரிப்பதை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால் கூட செயற்கை இரத்தத்தைத்
தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய
முடியும். எனவே தான்
“மனித நேயத்தை சொற்களால் அல்ல
இரத்ததானத்தால் வெளிப்படுத்துவோம்”
என்ற அறைகூவலோடு
செயல்படுத்துகின்ற செல்கள் அனைத்தும் உயிர் அளிப்பதற்கு சமமாக போற்றப்படுகின்றன.
இரத்ததானம் உயிர்காக்கும்
முறையாக அனைவராலும் போற்றப்படும் அதே வேளையில் அவ்வாறு இரத்ததானம் செய்வதால்
பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படும் என்று எண்ணுகின்ற மக்களும் நம்மிடம் இல்லாமல்
இல்லை. குறிப்பாக அடிக்கடி இரத்ததானம் செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற தப்பான
எண்ணம் பலரிடம் உள்ளது.
இரத்த தானம் கொடுக்காமலிருக்க நாம் சொல்லும்
காரணங்கள்:
நமது
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும். பின்னர்
அவை தானாகவே அழிந்து புதியவை தோன்றும். நாம் இரத்தம் கொடுத்தாலும்
கொடுக்காவிட்டாலும் இதுதான் இயற்கை. ஆக, அழிந்து
பின் திரும்ப உருவாகப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லது
தானே?
அண்மையில்
நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் அடிக்கடி இரத்ததானம் செய்கின்றவர்களில் புற்றுநோய்
பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது என்றும், புதிய இரத்தம் உருவாக காரணமாகி நமக்கு
நன்மையையே கொண்டு வருகிறது என்றும் உறுதிபடுத்தியுள்ளது.
பிறரைக்
கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல
கொடுத்து
வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால்
இயன்றளவு பிறர்க்கு கொடுத்து வாழ்வோம்!!!
இரத்ததானம் பற்றி மக்களிடையே
இருக்கும் பயத்தை
போக்கி, இரத்ததானம் செய்வது நமது
நலனுக்கு மட்டுமல்லாது, நமது சமூதாயத்தின் வளர்ச்சிக்கே
உறுதுணையாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தி, அதன் நன்மைகளை எடுத்துக் கூறி
இரத்ததானம் செய்யும் ஆவலைத் தூண்டிட நேசகரங்கள் நீட்டும் நண்பர்களுடன் நேசம் அறக்கட்டளையும் தங்களது பங்களிப்பை அளிக்கும் என்று உறுதிகொள்கிறோம். நீங்களும் நேசகரத்துடன் இணையுங்கள்.....
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் அறிய
(நன்றி: தாருல் அதர்.காம்)

0 comments: