twitter



நாமும் இரத்ததானம் செய்யலாமே!!!
தாராளதன்மைபல வகைகளில் வெளிப்படலாம். நன்கொடைஅன்னதானம் ஆகியவை கொடையின் வடிவங்களே. கொடையாக வழங்கப்படும் பொருளை அல்லது செல்வத்தை விட தாராளமான மனநிலையே உண்மையான வள்ளல் தன்மையை வெளிக்காaட்டும். தானத்தில் சிறந்தது இரத்ததானம். மனித நேயமுடைய அன்புள்ளங்களால் தான் இத்தகைய கொடைகளை அளிக்க முடியும். சொல் நயங்களால் பேசப்படுகின்ற தலைப்பு அல்ல இது. உணர்வுபூர்வமாக செயல்படுத்த வேண்டியது. இன்று அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாக பலரால் செயல்படுத்தப்படுவது தான் இரத்ததானம்.

உடலிலுள்ள ஒவ்வொரு நாடி நரம்புகளுக்கு ஊடாக ஓடுவது தான் இரத்தம். சோதனைக்குழாய் மூலமாக குழந்தை கருத்தரிப்பதை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால் கூட செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும். எனவே தான்

மனித நேயத்தை சொற்களால் அல்ல
இரத்ததானத்தால் வெளிப்படுத்துவோம்
என்ற அறைகூவலோடு செயல்படுத்துகின்ற செல்கள் அனைத்தும் உயிர் அளிப்பதற்கு சமமாக போற்றப்படுகின்றன.
இரத்ததானம் உயிர்காக்கும் முறையாக அனைவராலும் போற்றப்படும் அதே வேளையில் அவ்வாறு இரத்ததானம் செய்வதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படும் என்று எண்ணுகின்ற மக்களும் நம்மிடம் இல்லாமல் இல்லை. குறிப்பாக அடிக்கடி இரத்ததானம் செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற தப்பான எண்ணம் பலரிடம் உள்ளது. 

இரத்த தானம் கொடுக்காமலிருக்க நாம் சொல்லும் காரணங்கள்:
நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும். பின்னர் அவை தானாகவே அழிந்து புதியவை தோன்றும். நாம் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் இயற்கை. ஆக, அழிந்து பின் திரும்ப உருவாகப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லது தானே?
அண்மையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் அடிக்கடி இரத்ததானம் செய்கின்றவர்களில் புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது என்றும், புதிய இரத்தம் உருவாக காரணமாகி நமக்கு நன்மையையே கொண்டு வருகிறது என்றும் உறுதிபடுத்தியுள்ளது.




பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல
கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. 
ஆகவே தங்களால் இயன்றளவு பிறர்க்கு கொடுத்து வாழ்வோம்!!!


இரத்ததானம் பற்றி மக்களிடையே இருக்கும்  பயத்தை போக்கி இரத்ததானம் செய்வது நமது நலனுக்கு மட்டுமல்லாது, நமது சமூதாயத்தின் வளர்ச்சிக்கே உறுதுணையாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தி, அதன் நன்மைகளை எடுத்துக் கூறி இரத்ததானம் செய்யும் ஆவலைத் தூண்டிட நேசகரங்கள் நீட்டும் நண்பர்களுடன் நேசம் அறக்கட்டளையும் தங்களது பங்களிப்பை அளிக்கும் என்று உறுதிகொள்கிறோம். நீங்களும் நேசகரத்துடன் இணையுங்கள்.....


இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் அறிய




(நன்றி: தாருல் அதர்.காம்)
Thursday, June 14, 2012 | 0 comments | Labels:


Dear Friends,

Nesam foundations on its first 1st Social Service Camp at 

Venue: M/S. Annai Jothi Seva Trust, Adaiyakarunkulam, (Near Ambai)
Date: June 2nd week

and  planning to provide text books and uniforms to orphans & mentally disables.

We expect your valuable presence & Contributions.

Please send payment by Cash/Cheque/DD in favour of "Nesam Foundations" Payable at Tirunelveli.

Bank : IDBI BANK, Tirunelveli Branch
A/C No : 0708102000005975
Pan No: AABTN6028L
Monday, June 11, 2012 | 0 comments | Labels:
Dear Friends,  

Greetings!!!

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
     -    குறள் 781

பொருள் :
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


With our friends support we have jointly serviced orphans as a team since 2003, now we are planning to expand our wings and establish it as an organization. For we believe an organization is stronger and regimented.

We would like to bring to your kind notice that we have now registered “Nesam Foundations” as a trust (Reg no: 74/2012)

Initially as a team we were involved in services only to orphans, now as NesamFoundations we would also extend support to Old age, physically and mentally challenged, Transgender, etc., by supporting with education, food, medicine, living place and small business to support their lively hood.

Our esteemed vision is to start an educational center to provide free education to the poor and talented students, for we strongly believe that education is the only source to change the attitude of people towards society.

அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

Educate all’ is our motto

We expect your esteemed support and guidance as ever.

சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

-----------------------------------------------------------------------------------------------------------
Registered Address:

Nesam Foundations (Reg no: 74/2012)
Pan No: AABTN6028L
24B/1, Perumal South Mada Street,
Palayamkottai, Tirunelveli,
Tamilnadu – 627 002.
India.
-----------------------------------------------------------------------------------------------------------
Our Bank : IDBI BANK, Tirunelveli Branch
A/C No : 0708102000005975
-----------------------------------------------------------------------------------------------------------
Wednesday, June 6, 2012 | 0 comments | Labels:



ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமையும் ஏமாப் புடைத்து
பொருட்பால் - அரசியல் - கல்வி - 398

(ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.)


(Thanks to Agaram Foundation --- our inspiration)



கற்போம்... கற்பிப்போம்.... கற்பதற்கு....





| 0 comments | Labels: